இவ்வருடம் ஓகஸ்ட் இறுதிவரை இணையதள மோசடிகள் பற்றிய 2,200 முறைப்பாடுகள்

இவ்வருடம் ஓகஸ்ட் இறுதிவரை இணையதள மோசடிகள் பற்றிய 2,200 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக இலங்கை கணினி தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

B5CDBEEF-153F-11

இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை முகநூல் (பேஸ் புக்) தொடர்பானவை எனவும், முகநூல் பரிமாற்றத்தின் மூலம் சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுபடல், சட்டபூர்வ கணக்குகளில் அத்துமீறிப் புகுதல், ஏமாற்றங்களில் ஈடுபடல் போன்றவை முக்கிய இடம் வகிப்பதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.

முகநூல் தொலைத்தொடர்பாடல்களுக்கு மேலதிகமாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக செய்யப்படும் மோசடிகள் பற்றியும் ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.