தன்னுடைய சொந்த மகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக 623 குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கி இருந்த தந்தையொருவருக்கு 48 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் குற்றச் செயல்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி யோங் ஷரிடா சஷாலி குறித்த தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவை சேர்ந்த விவாகரத்தான தந்தையொருவர் 15 வயதுடைய தன் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமையினை ஒப்புக்கொண்டமையால் 48 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று காலை 8.40 மணியளவில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் தன்னுடைய குற்றத்தினை ஒப்புக் கொண்டமையால் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தன்னுடைய சொந்த மகளை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரையில் ஒவ்வொரு நாளும் மூன்று முறை அந்தச் சிறுமியிடம் தகாத உறவில் குறித்த நபர் ஈடுபட்டு வந்தமை வழக்கு விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.