யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் – கல்வியன்காடு பிரதேசத்தைச் சேர்ந்த தங்கவேல் உதயகுமார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாம் இராணுவத்தில் கடமையாற்றுவதாகவும் தெரிவித்த தங்கவேல் உதயகுமார், வங்கி கடன் பெற்றுத்தருவதாக தெரிவித்து அண்மைக்காலமாக பலரிடம் நீதி மோசடி செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் பொதுமக்கள் முறையிட்டுவந்த நிலையில், குறித்த நபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.