உத்தியோகபூர்வ விஜயமொன்றைமேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் மற்றும் இரண்டு நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளவுள்ள எட்கா உடன்படிக்கை, இரண்டு நாடுகளுக்கிடையிலான மீனவர் உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
குறிப்பாக இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும்
செயற்பாடு குறித்தும் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன இந்திய பிரதமருக்கு விளக்கமளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதாவது புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் எவ்வாறு சென்றுகொண் டிருக்கின்றன தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடி திலக்மாரப்பனவிடம் வினவ வுள்ளார்.
அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இந்தியா தொடர்ந்து அக்கறைகாட்டி வருகின்ற நிலைமையிலேயே இந்தியப் பிரதமர் மோடி இது தொடர்பில் அமைச்சர் திலக்மாரப்பனவிடம் வினவவிருக்கின்றார்.
அதேபோன்று எட்கா உடன்படிக்கை தொடர்பாகவும் அதில் உள்ளடக்கப்படவுள்ள விடயங்கள் குறித்தும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் மாரப்பன இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவு செயலாளர் ஜெயசங்கர், மற்றும் பல்வேறு முக்கிய அமைச்சர்களை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
நாளை 10ஆம் திகதிவரை புதுடில்லியில் தங்கியிருக்கும் வெளிவிவகார அமைச்சர் மாரப்பன இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுவார். குறிப்பாக வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக அமைச்சர் மாரப்பன இந்தியா சென்றுள்ளனர்.
அவருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம், தெற்காசிய மற்றம் சார்க் பிரிவுக்கான வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் எம்.ஏ.கே. கிரிஹகம ஆகியோரும் வெளிவிவகார அமைச்சருடன் இந்தியா சென்றுள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு 70 இற்கு 30 என்ற அடிப்படையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மத்தள விமான நிலையத்தை இந்தியா ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே வெ ளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பனவின் இந்திய விஜயம் அமையவுள்ளதுடன் இந்தியப் பிரதமருடனான சந்திப்பும் இன்று இடம்பெறுகின்றது.
இதேவேளை கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெ ளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் உதவியுடனான திட்டங்கள் இலங்கையில் தாமதமடைந்து வருவதாக விசனம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் திலக்மாரப்பனவின் இந்திய விஜயம் பிராந்திய அரசியலில் ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.