சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை விளக்கும் வகையில் சச்சின் – எ பில்லியன் டிரீம்ஸ் என்ற படம் ஹிந்தி மொழியில் வெளியானது.
இப்படத்தில் சச்சினின் கிரிக்கெட் பயணம் குறித்து விவரிக்கப்பட்டிருந்தது. இது சச்சின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதனை பார்த்த 6 வயது சிறுமி சச்சினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘நான் உங்கள் படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் சிறு வயது நிகழ்வுகளை கண்டு நான் சிரித்து மகிழ்ந்தேன். நீங்கள் கடைசி போட்டியில் விளையாடியது எனக்கு கஷ்டமாக இருந்தது. நான் உங்கள் குடும்பத்துடன் உங்களை சந்திக்க விரும்புகிறேன்’ என எழுதியிருந்தாள்.
சிறுமியின் கடிதத்திற்கு சச்சின் தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், ‘எனக்கு கடிதம் எழுதியதற்கு நன்றி. மேலும் நீ படத்தை ரசித்து பார்த்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்’ என கூறியுள்ளார்.