பெற்ற தாயை அறையொன்றில் பூட்டி வைத்து டிப்பர் வகன புகையை அறைக்குள் விட்டு கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று தம்புள்ள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தம்புள்ள பன்னம் பிட்டிய பிரசேத்தில் வழும் 75 வயதான தாயொருவரே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிப தாயின் கடைசி மகனே தனது தாயைக் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.அறைக்குள் தனது தாயை பூட்டி வைத்து டிப்பர் வாகனத்தின் கறுப்பு புகையை அறைக்குள் விட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் பெண்ணொருவர் உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.
குறித்த வயோதிபத் தாயின் உடல் முழுவதும் கறுப்பு புகை இருந்தாகவும் வைத்தியசாலையில் அவரை குளிப்பாட்டி சுத்தம் செய்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த தாயிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட தாய் தனது மகனுக்கு தண்டனை எதுவும் வழங்க வேண்டாம் என பொலிஸாரிடம் கேண்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.