வானிலிருந்து விழுந்த மர்ம பொருள் ; நொடி பொழுதில் பிணமான இளைஞன் ( வீடியோ இணைப்பு)

ஈராக்கில் இளைஞரொருவர் வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் நொடி பொழுதில் வீதியில் விழுந்து பிணமான சம்பவம் தொடர்பிலான வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிசிரிவி வீடியோவில், வீதியில் வரும் தன் நண்பரின் காருக்கு அருகே சென்ற இளைஞன், காருக்குள் இருக்கும் நண்பரிடம் குனிந்து கண்ணாடி வழியாக பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ஏதோ வானத்திலிருந்து இளைஞரின் தலை உச்சியில் பாய, வீதியில் சரிந்த இளைஞர் எந்தவித அசைவில்லாமல் கிடக்கிறார்.

இதை கண்டு அதிர்ச்சிடைந்த அங்கிருந்த மக்கள் ஓடி வந்து இளைஞரை தூக்கி நண்பரின் காரில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.எனினும், இளைஞர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக இளைஞரை சோதனை செய்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வானிலிருந்து விழுந்த துப்பாக்கி குண்டு தலையில் பாய்ந்தமையாலே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.