பிரிட்டனைச் சேர்ந்த 23 வயது பெண்ணொருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதோடு, அவரைக் கொலை செய்ய முயன்றவரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முகப்புத்தகம் ஊடாக உதவிகேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அவுஸ்திரியாவின் சிட்னியில் தங்கியிருந்தார்.
குறித்த பெண்ணுடன் தங்கியிருந்த மெக்சிக்கோ நாட்டைச்சேர்ந்த நபரொருவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதோடு அவரைக் கொலை செய்வதற்கு கத்தியால் தாக்கியுள்ளார்.
எனினும் குறித்த நபரிடமிருந்து தப்பிய அந்தப் பெண், ஒரு அறைக்குள் சென்று உள்ளே பூட்டிய பின்னர், முகப்புத்தகத்தில் காயங்களுடன் கூடிய தனது புகைப்படங்களை பதிவேற்றி உதவி கேட்டுள்ளார்.
அவருக்கு அவசர உதவி எண் மற்றும் காவல்துறை எண் ஆகியவை தெரியாததால் அவர் முகப்புத்தகத்தின் உதவியை நாடியுள்ளார்.
இவ்விடயம் குறித்து, அவரது நண்பர்கள் அவுஸ்திரேலிய காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறையினரர் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.