சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பது தொடர்பில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் அரச உயர்மட்டம் என்பன தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
சிறைச்சாலை வைத்தியசாலையின் பி 18069 கட்டிலில் லலித் வீரதுங்கவும், பி 18068 கட்டலில் அனுஷவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிறைச்சாலைக்குள் வரும்போது சுகதேகிகளாக இருந்த இவர்கள் திடீரென நோயாளிகளாக மாறியிருப்பது பெரும் வியப்பைத் தருவதாக மேற்படி தரப்புகள் அரச உயர்மட்டத்திடம் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, தண்டனை பெற்று சிறைச்சாலைகளுக்குச் செல்பவர்கள் இப்படி நடந்து கொள்வது தவறான முன்னுதாரணங்களை எதிர்காலத்தில் வழங்கும் என்பதால் இது விடயத்தில் தலையிட்டு நீதியான முறையில் அதிகாரிகள் நடந்து கொள்ள வலியுறுத்த வேண்டும் எனவும் இந்த தரப்புகள் அரசைக் கேட்டுள்ளன.