இந்து கடவுள்களை அவமதிக்கும் விளம்பரம்

இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் விளம்பரம் வெளியிட்டதற்காக முடிதிருத்தும் கலைஞரான ஜாவேத் ஹபீப் மன்னிப்பு கேட்டுள்ளார்.

59b4ede9da0fb-IBCTAMIL

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல முடி திருத்தும் கலைஞர் ஜாவேத் ஹபீப் ஆவார்.

இவருக்குச் சொந்தமான முடி திருத்தும் கடைகள் நாட்டின் பல இடங்களிலும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலமான கல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு முடி திருத்திக்கொள்ள இந்து கடவுள்கள் வருகின்றனர் என்று ஹபீப் நிறுவனம் சார்பில் விளம்பரம் ஒன்று வெளியானது.

முடி திருத்தும் கடையில் இந்துக் கடவுள்கள் அமர்ந்திருப்பது போன்று படமும் வெளியாகியிருந்தது.

இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததோடு சமூக வலைத்தளங்களில் இந்நிறுவனத்திற்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்து பலர் கருத்துக்களையும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் முதல்வர் யோகி அதித்யநாத் தலைமையிலான கும்பல் ஒன்று உன்னாவ் மாவட்டத்தின் மோதி நகரில் உள்ள ஹபீப்பின் கடைக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதமாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஈடுப்பவர்கள் இந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் விளம்பரம் வெளியிட்டதற்காக ஜாவேத் ஹபீப் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எனக்கு கத்தரிக்கோல்தான் மதம்.பல காலமாக எவ்வித பாகுபாடுமின்றி இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளேன்.எனக்கு தெரியாமல் கல்கத்தாவைச் சேர்ந்த என் பங்குதாரர்கள் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர்.இதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.விளம்பரம் வாபஸ் பெறப்பட்டுவிட்டது.எல்லோருக்கும் துர்க்கா பூஜை வாழ்த்துக்கள்’ என   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் விளம்பரம் வெளியிட்டுள்ளமைக்காக உத்தர பிரதேச கைதராபாத் போலீஸ் நிலையத்தில் ஹபீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.