சமீபத்தில் தற்கொலைகள் அதிகமாகி விட்டது. பெங்களூரை சேர்ந்தவர் கரண் தாமஸ் ஜோசப். 29 வயதாகும் இவர் ஒரு இசைக்கலைஞர். தனது நண்பருடன் மும்பையில் பாந்த்ராவில் வசித்து வருகிறார்.
சமீபத்தில் பல கச்சேரிகளை பெங்களூரில் செய்துவிட்டு கடந்த மாதம் தான் மும்பை வந்திருக்கிறார். இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என்று இங்கு வந்துள்ளார்.
நேற்று காலை 8.30 மணியளவில் வீட்டில் டிவி பார்த்துகொண்டிருந்தவர் திடீரென ஜன்னல் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். அடுக்கு மாடி குடியிருப்பின் 12 வது மாடியில் இருந்தவர் மேலிருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் இறந்தவரின் உடலை பரிசோதனை செய்ததில் அவர் குடிபோதையில் இருந்தாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்த தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.