மும்பையைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியின் வயிற்றிலிருந்து 8 மாத குழந்தையை அகற்றம்.
இதனை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சைமூலம் அகற்றினர். குறைப்பிரசவம் என்பதால் குழந்தையில் சில உடல் உறுப்புகள் சரியா வளர்ச்சி அடையவில்லை என்று மருததுவர்கள் தெரிவித்தனர்.
1.8 கிலோ எடையுடன் அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட அந்த ஆண் குழந்தையை சிறுமியின் பெற்றோர் விரும்பினால் கொடுப்போம். இல்லாவிட்டால் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுப்போம் என்று மருத்துவர்கள் கூறினர்.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்த 13 வயது சிறுமியின் வயிற்றில் குழந்தை வளர்வது 27 வாரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதால் அபார்ஷனுக்காக அவளுடைய பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிததிருந்தது.