இனி ஆண்டின் முதல் மாதம், எங்கள் நாட்டின் தமிழ் மாதம்: கனடா நாட்டின் அதிரடி அறிவிப்பின் பின்னணி..?

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கனியன் பூங்குன்றனாரின் உலகப்புகழ்பெற்ற முழக்கத்தை இன்று உலகமெங்கும் தமிழர்கள் பறைசாற்றி வருகின்றனர்.

கனடாவில் ஜனவரி மாதத்தை தமிழ் மரபு மாதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நாடு தழுவிய அளவில் கொண்டாடும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வருடம்  நிறைவேறியது.

Canada-Flag-670x313 கடந்த மே மாதம் இந்த மசோதாவை கனடிய நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி, ஒரு தனிநபர் மசோதாவாகத் தாக்கல் செய்திருந்தார்.

இனி வரும் ஆண்டுகளில் கனடாவில் ஜனவரி மாதம் ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்று நாடு முழுவதும் கொண்டாடப்படும்.

இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் ஒருமித்த ஆதரவுடன் தான்  நிறைவேற்றப்பட்டது.

ஒட்டுமொத்தமான கனேடிய ஜனத்தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கினர் வாழும் ஒன்ராரியோ மாநிலத்தின் மக்கள் அவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும்.

உலகிலேயே அதிகூடிய எண்ணிக்கையில், ஏறக்குறைய 300,000 புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் கனடா நாட்டில்,

அவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் வாழும் ரொரன்ரோ நகரே ஒன்ராரியோ மாநிலத்தின் தலைநகர் என்பது குறிப்பிடத்தக்கது.