தற்போது ஸ்ரீலங்காவில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஸ்ரீலங்கவின் மேல், சப்பிரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் தென் மாகாணங்களில் மேலும் மழை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நேற்றையதினம் மழை சற்று குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மழையினால் மூடப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்டத்தின் 5 பிரதேச செயலகப்பிரிவின் கீழ் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
சம்பரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய இதனை தெரிவித்தார்.
இரத்தினபுர குருவிடை எஹெலியகொடை அயகம மற்றும் எலபாத ஆகிய பகுதிகளுக்கான பாடசாலைகளே இன்று திறக்கப்படவுள்ளது.