உலகின் கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது ?

உலகின் கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் சீனா , பெட்ரோல் , டீசலில் இயங்கும் , கார், ‘வான்’ van களின் உற்பத்தியை தடைசெய்ய திட்டமிடுவதாக அறிவித்துள்ளது.

illusion-facebook

இதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டதாகக் கூறும் கைத்தொழில் அமைச்சு , இந்தத் தடை எப்பொழுது அமுலுக்கு வருமென்பது இனித்தான் தீர்மானிக்கப்படும் என்று கூறி இருக்கின்றது .

சென்ற வருடம் மாத்திரம் சீனா , 28 மில்லியன் கார்களை உற்பத்தி செய்துள்ளது . சுமாராக உலக தேவையின் மூன்றிலொரு தொகை கார்களை சீனாவே உற்பத்தி செய்து வருகின்றது.

பிரிட்டனும் , பிரான்சும் ஏற்கனவே பெட்ரோல் வாகனங்களை 2040 இல் தடை செய்யப் போவதாக அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.