மூளை ரத்த நாள வீக்கத்தால் இறந்த 13 வயது சிறுமி ஒருவரின் உடல் உறுப்புகள் 8 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது.
ஒருவரின் உடல் உறுப்புகள் அதிகமானோருக்கு தானம் செய்யப்ப்பட்டிருக்கும் வரலாற்று பதிவு இதுதான்.
சோமர்செட்டில் வாழ்ந்த ஜெமிமா லேஸெல் 2012 ஆம் ஆண்டு இறந்தார். அவருடைய இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம், சிறு குடல் மற்றும் கல்லீரல் உறுப்புகள் 5 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன.
ஜெமிமா மிகவும் புத்திசாலி, இரக்க குணமுடையவர் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர் என்று தெரிவித்திருக்கும் அவருடைய பெற்றோர், அவர் விட்டு சென்றுள்ளதை நினைத்து மிகவும் பெருமைப்பட்டிருப்பார் என்று தெரிவித்திருக்கின்றனர்.
இதுவரை செய்யப்பட்ட உறுப்புகள் தானத்தில் இவ்வளவு அதிகமானோருக்கு ஒருவரின் உடல் உறுப்புகள் தானம் பயன்பட்டதில்லை என்று ஐக்கிய ராஜ்ஜிய தேசிய சுகாதார சேவை தெரிவித்திருக்கிறது.