ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு அர்ஜுன் அலோசியஸிற்கு கடும் உத்தரவு

பேர்ப்­பச்­சுவல் ட்ரெ­ஷரிஸ் நிறு­வனப் பணிப்­பாளர் அர்ஜுன் அலோ­சியஸ் 5­வது நாளாக இன்றும் பிணை ­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரிடம் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

Arjun-Aloysius-626x380

பேப்பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்­பிலும் தன்­மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை தெளி­வு­ப­டுத்தும் நோக்­கிலும் விசேட அறிக்­கை­யொன்றை வழங்க கடந்த நான்கு நாட்­க­ளாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் முன்­னி­லையில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

இந்­நி­லையில், அர்ஜுன் அலோ­சியஸை வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஆணைக்குழு அமர்வை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என பிணை ­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு உத்தரவிட்டுள்ளது.