மாணவர்களை கல்வி கற்க வைப்பதற்காக அரசின் அதிரடி நடவடிக்கை.

பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களை மீண்டும் பாடசாலையில் இணைத்துக்கொள்ளும் வகையில் விசேட குழு ஒன்று நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ளது.

ab1e1d0cb6ebf397dbaa2f79b89aa17c_XL

குறித்த குழுவினர் ஊர் ஊராகவும் தோட்டம் தோட்டமாகவும் சென்று பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களை மீண்டும் பாடசாலைக்கு சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

அம்பகமுவ பிரதேசம் வெலிஓயா தோட்டம் கீழ் பிரிவிற்கான கொன்கிரீட் வீதி மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு பாவனைக்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் இராஜாங்க கல்வியமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த செயற்திட்டத்தின் ஊடாக பாடசாலைக்கு மாணவர்கள் செல்லாத காரணங்கள் இனங்காணப்பட்டு அதற்கான உதவிகளும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் படிக்காதவர்கள் இருக்க கூடாது என்பதற்காகவும் படித்தவர்களின் கல்வி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் வறுமை மற்றும் வேறு காரணங்களினால் பாடசாலை கல்வியை இடை நிறுத்திய மாணவர்களை கல்வி கற்க வைப்பதற்காகவும் இந்த வேலைதிட்டம் முன்னெடுக்கபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.