இலங்கையில் கர்ப்பிணி பெண்ணிற்கு கணவன் செய்த கொடூரம்

தொடர்ந்து மழைபெய்து வரும் நிலையில் கணவர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை மூடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

download (7)

இந்த சம்பவம் பண்டாரகம – கல்வதுடே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் மழையில் வீட்டுக்கு வெளியே நனைந்து கொண்டிருப்பதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் கர்ப்பிணி பெண் மழையில் நனைந்து கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.