எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவும், ஏனைய மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது,
இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்கனவே அடிமட்டத்தில் இருந்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்தோ, அல்லது தனியான கூட்டணி ஒன்றை அமைத்தோ, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடாது.
இணைந்து போட்டியிடுவதற்கு வேறு முஸ்லிம் கட்சிகள் ஏதும் சிறிலங்கா முஸ்லிம காங்கிரசிடம் இதுவரை கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.