அமெரிக்கா முழுவதும் வேட்டையாடும் இர்மா புயல்! இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியுமா ?

201612131548049812_tamil-nadu-andhra-pradesh-cyclone-hit-high-level-longer_secvpf-gifஇர்மா புயல் தாக்கியதில் அமெரிக்காவில் 3 பேர் பலியாகி உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அட்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் கரீபியன் தீவுகளை பதம் பார்த்தது. இதைதொடர்ந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை இன்று தாக்கியது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது.
இர்மா புயல் தாக்கத்தால் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் தாக்கியதில் அமெரிக்காவில் 3 பேர் பலியாகினர். இந்நிலையில், இர்மா புயல் பாதிப்பில் சிக்கியுள்ள அமெரிக்கர்களுக்காக சேவா இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமெரிக்கவாழ் இந்திய அமைப்பினர் சார்பில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு அட்லாண்டா மாகாணத்தில் ஏற்படுத்திய நிவாரண முகாம்களில் சுமார் 300 குடும்பத்தினர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல், மற்றொரு தன்னார்வ அமைப்பு ஏற்படுத்தியுள்ள நிவாரண முகாம்களில் சுமார் 2,000 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அட்லாண்டாவில் உள்ள 4 கோயில்களும் திறக்கப்பட்டு புயல் பாதிப்பில் சிக்கியுள்ள புளோரிடா மாகாண பொதுமக்கள் தங்கி கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயல் பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உடனடி உதவியளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.