ஐயாயிரம் ரூபாய் தாள்களைத் தடை செய்யவேண்டிய நிலையில் இலங்கை.

5000இலங்­கை­யில் நாண­யத்­தாள் போலி அச்­சி­டலைத் தடுக்கும் தொழில்­நுட்ப முறை கடைப்­பி­டிக்­கா­மை­யி­னால் நாடு முழு­வ­தும் போலி நாண­யத்­தாள்­கள் வேக­மா­கப் பரப்­பப்­பட்டு வரு­வ­தாக அரச அச்­சுப்­பொறித் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.

போலி நாண­யத்­தாள் அச்­சி­டப்­ப­டு­வது தொடர்­பில் ஒவ்­வொரு மாத­மும் முறைப்­பாடு பதி­வா­கின்­றது. ஒரு மாதத்­திற்கு நான்கு முறைப்­பா­டு­கள் தொடர்­பில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

கடந்த சில மாதங்­க­ளாக நாடு முழு­வ­தும் மோச­டி­யான முறை­யில் அச்­சி­டப்­பட்ட 5 ஆயி­ரம் ரூபாய் தாள்­கள் பொலி­ஸா­ரி­னால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

பன்­னாட்­டுச் சமூ­கத்­தால் ஏற்­றுக் கொள்­ளப்­பட்ட போலி அச்­சி­டலைத் தடுக்­கும் தொழில்­நுட்ப முறை இலங்­கை­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டா­மை­யி­னா­லேயே இவ்­வாறு போலித் தாள்­கள் அச்­சி­டும் நட­வ­டிக்கை அதி­க­ரித்­துள்­ள­தாகக் குறிப்­பி­டப்ப­டுகின்­றது.

இவ்வாறான போலி நாணயத்தாள்களை அடையாளம் காணும் நட வடிக்கை கடினமாக உள்ளதுடன், அவ்வா றான சில தொழில்நுட் பங்கள் இந்த நாட்டு வங்கிக் கட்டமைப்புக்குள் மாத்திரமேயுள்ளது.

போலி தாள்களின் அதி கரிப்பைக் கட்டுப்படுத்து வதற்காக 5 ஆயிரம் ரூபாய் தாள்களைத் தடை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று அரச அச்சுப்பொறி திணைக்க ளத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.