இலங்கை செய்ய வேண்டியது என்ன?

geneva-human-rights-council-commissionerநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மிகவும் திறனான முறையிலும் துரிதமாகவும் மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹூசைன் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36வது கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகத்தின் பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகளை விடுவிப்பது மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச மனித உரிமை தரத்திற்கு பொருத்தமான புதிய சட்டத்தை கொண்டு வருமாறு தான் இதற்கு முன்னர் விடுத்த கோரிக்கை மீண்டும் நினைவூட்டுவதாகவும் மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் சம்பந்தமாக பொருத்தமான நடவடிக்கைகளை பொறுப்புடன் இலங்கை அரசாங்கம் எடுக்காது போனால், அந்த சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற செயற்பாடுகளின் தேவை குறித்து வலியுறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இந்த கூட்டத் தொடருடன் 15 இடைநிலை கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்த கூட்டங்களை ஒழுங்கு செய்துள்ளன. இவற்றின் முதலாவது கூட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.