அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாள் கடந்த 3ஆம் திகதி. அன்றைய தினமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடும் நடைபெற்றது.
அன்றைய தினம் இரவு, மேல்மாகாண முதலமைச்சரின் வீட்டுக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார்.
அங்கு அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இருந்துள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, இன்றைய (சு.கவின் மாநாட்டில்) தமிழ் அரசியல்வாதி ஒருவர் பேசியதன் சாராம்சத்தைக் கேட்டுள்ளார்.
அதற்குப் பதில் கூறுவதற்கு பைசர் முஸ்தபா தடுமாறியுள்ளார். இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ‘நீங்கள் பேசாமல் சிங்களவராக மாறிவிடுங்கள்’ என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.