பணத்திற்கு ஆசைப்பட்டு செயற்படும் இராணுவத்தினரே எனக்கு எதிராக போராடுகின்றனர். இவர்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவின் கும்பலாகும் என்று பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்டவை கைது செய்தமையில் எந்தவொரு தவறும் கிடையாது. இவர்களுக்கு நஷ்டஈடு செலுத்துவதற்கு தனியாக நிதியம் ஆரம்பிக்க வேண்டியதில்லை. தமது பணத்தை கொண்டே நஷ்டஈட்டை செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பணத்திற்கு ஆசைப்பட்டு செயற்படும் இராணுவத்தினரே எனக்கு எதிராக போராடுகின்றனர். இவர்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவின் கும்பலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெளத்த பக்தர்கள் அணியும் சில் துணி விவகாரம் தொடர்பாக வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்டவை கைது செய்ததில் எந்த தவறும் கிடையாது. ஆட்சியாளர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய சொன்னாலும் செய்வதா? அதற்கு இடமளிக்கக் கூடாது. மேலும் நினைத்த மாதிரி செலவிடுவதற்கு இது ஒன்றும் மஹிந்த ராஜபக் ஷவின் தந்தையின் உடைமையில்லை.
மேலும் இராணுவத்தில் இணைபவர்கள் அனைவரும் தேசப்பற்றுள்ளவர்கள் இல்லை. பணத்திற்காக செயற்படப் கூடியவர்களும் உள்ளனர். ஆகவே மஹிந்த ராஜபக் ஷவின் கும்பலே எனக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றது என்றார்.