ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பற்றிய நூல் ஒன்றினை, அவருடைய மகள் சத்துரிக்கா சிறிசேன வெளியிடவுள்ளார்.
தனது தந்தையின் அரசியல் வாழ்வு எவ்வாறு அமைந்திருந்தது என்பது தொடர்பில், தனது பார்வையில் அறிந்து கொண்ட விடயங்களை குறித்த நூலில் அவர் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“ஜனாதிபதி தந்தை” என்ற பெயரில் சத்துரிக்கா வெளியிடவுள்ள குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா, எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் பேஸ்புக் பக்கத்தில் சத்துரிக்கா காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.