கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் இறுதி வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகுமென கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் ஏ.எல்.ஜஃபர் ஸாதிக் தெரிவித்தார்.
விடுதி வசதிகளுக்கு தகுதியான அனைத்து இறுதி வருட மாணவர்களும் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை தமது விடுதிகளுக்கு சமுகம் தருமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக இடம் பெற்று வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.