திருகோணமலையில் நில அதிர்வு!

Tamil-Daily-News-Paper_10108590131திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளில், நேற்று இரவு 8.45 மணியளவில் சுமார் 3 விநாடிகள் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

அதனால் சில வீடுகளில் மேசைகளில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பொருள்கள் கீழே விழுந்து உடைந்தன எனத் தெரிவிக்கப்பட்டது.

நில அதிர்வின் அச்சத்தால் பொது மக்கள் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.