பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்குத் தடை!

temple-dance-acceotable-formகல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல்கலாம் பிறந்த நாள், ஆண்டு விழாக் கொண்டாட்டம் போன்றவற்றின்போது, பள்ளிகளில், மாணவ – மாணவியர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அப்போது, சில தனியார் பள்ளிகளில் சினிமா நடிகர், நடிகையர் போன்று பேசுவது, நடிப்பது, திரைப்படப் பாடல்களை இசைக்கச் செய்து ஆடுவது உட்பட, பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இவையெல்லாம், பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தைக் கெடுப்பதாக, உயர் அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றுள்ளன.

அதனால், பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மீறி நடத்தினால் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் மாணவர்கள் புகார் அளிக்கலாம் எனப் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.