மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞன் கைது.

download (3)கைகளை பின்னால் கட்டி தனது காதலியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய காதலன் தொடர்பான தகவல் புஸ்ஸல்லாவையில் தெரியவந்துள்ளது.

மரக்கறி தோட்டத்தில் உள்ள கூடாரம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் சிறுமியொருவர் என்பதுடன், குறித்த காதலனை காவல்துறை கைது செய்துள்ளது.

பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் பயிலும் இந்த மாணவியின் தாய் வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அந்த சிறுமி இளைஞர் ஒருவருடன் காதலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தனது ஆசைக்கு இணங்குமாறு அந்த சிறுமியிடம் காதலன் கோரியுள்ள நிலையில், சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த இளைஞன் தந்திரமாக அந்த சிறுமியை மரக்கறி தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார்.

தனது நண்பர் ஒருவரை அனுப்பி அந்த சிறுமியை அழைத்து வர கூறியுள்ளார் அந்த இளைஞன்.

பின்னர் அந்த சிறுமியை மரக்கறி தோட்டத்தில் உள்ள கூடாரம் ஒன்றுக்கு அழைத்து வந்து அங்கே வைத்து பூட்டி விட்டு அவரது நண்பர் சென்றுள்ளார்.

பின்னர் அங்கு வந்த காதலன் சிறுமியின் கைகளை கட்டி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி வீடு வர தாமதமானதால் அவரின் பெரியப்பா அவரை தேடி சென்றுள்ள நிலையில், அவர் மரக்கறி தோட்ட கூடாரத்தில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் காவல்துறைக்கு தெரியப்படுத்திய பின்னர் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்து காதலனை கைது செய்துள்ளது.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள காதலன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.