இரத்தினபுரி சுமன பாலிகா வித்தியாலய வளாகத்தில் மண்சரிவு அபாயகரமான சூழ்நிலை காணப்பட்ட பகுதிகளில் மண்மூட்டைகள் நிரப்பி மண் அணைகள் அமைக்கும் பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவ வீரர்கள் இந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை கட்டிடங்களுக்கு ஏற்படவிருந்த பாதிப்பைத் தடுக்கும் இந்த செயற்றிட்டத்தில் 8 ஆவது கெமுனு காலாற் படையணியின் 21 படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
சுற்றிலும் மலைகள் சூழப்பட்ட குறித்த நிலப்பகுதியில் கடந்த தினங்களில் ஏற்பட்டிருந்த சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை வளாகத்தில் இந்த நிலைமை உருவாகியிருந்தது.
இதன்காரணமாக இராணுவ முகாமிற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.