ஸ்ரீலங்காவின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் ஒரளவு மழைபெய்யும் என்று குறிப்பிட்டுள்ளது.
சில பகுதிகளில் குறிப்பாக வட – மத்திய மாகாணம், மாத்தளை, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காலி, அம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பிரதேசத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,
நாட்டின் ஏனைய கடற்கரை பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால் பொதுமக்களை இடிமின்னலிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.