தாய் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசியுள்ளார்.

8e0ed37ebcf95fa32bda4916c17885bdஇங்கிலாந்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி ஜன்னல் வழியாக வீட்டுக்கு வெளியே வீசியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு ஸ்டாப்போர்டு கிரவுன் கோர்ட்டில் நடைபெற்றது.

இங்கிலாந்தில் ஸ்டாப் போர்டு கிரவுன் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் கர்ப்பம் அடைந்த நிலையி;ல் அதை தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் அதை பிறந்தவுடன் பிளாஸ்டிக் பையில் சுற்றி ஜன்னல் வழியாக வீட்டுக்கு வெளியே வீசியுள்ளார்.

அதனால் அக்குழந்தை இறந்ததுள்ளது.

எனவே அவரை கைது செய்த பொலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது குழந்தையின் தந்தை தன்னை ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.எனவே அக்குழந்தை தனக்கு தேவையில்லை என்று எறிந்துவிட்டதாக தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மைக்கேல் சேம்ஸன் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.