முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான ஜோசித ராஜபக்சவிடம் இருந்து வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக, குற்ற விசாரணைப் பிரிவிற்கு இன்று ஆஜராக வேண்டும் என்று முன்னர் அழைப்பாணை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஜோசித ராஜபக்ச இன்று குற்ற விசாரணைப் பிரிவிற்கு ஆஜராகவில்லை என தெரிய வந்துள்ளது.
கல்ஹிசையில் நிலமொன்றை கொள்வனவு செய்தமை, மற்றும் இரத்மலானையில் சொகுசு வீடொன்றை நிர்மாணித்தமை, போன்ற விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலத்தைப் பெறுவதற்காகவே, அவர் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜோசித ஆஜர் ஆகாமை குறித்து அவரது சட்டத்தரணி பிரேமலால் சி. தொலவத்தை குறிப்பிடுகையில், ஜோசித தனிப்பட்ட காரணங்களுக்காகவே ஆஜராகவில்லை என்றும், இது குறித்து நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.