பாடசாலை அதிபர் கைது.

School sign.previewஇலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை பிரதேச பாடசாலையொன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் மோசடித் தடுப்புப் பிரிவினரால் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் 3ஆம் தர மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக அதிபர் 10 ஆயிரம் ரூபாவை இலஞ்சம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிபர் மாத்தறை நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.