பதுளை ஹாலிஎல குயின்டவுன் தோட்டத்தில் பகுதியில் 100 வருடம் பழமையான பூ மரம் ஒன்றில் சுயமாக ஓரு பிள்ளையார் சிலை உருவாகியுள்ளது.
ஹாலிஎல குயின்டவுன் கிருபானந்தவாரியர் பாடசாலை வளாகத்தில் இவ்வாறு அபூர்வமான உருவம் ஒன்று விநாயக சதுர்த்தி தினமன்று தீச்சட்டி ஏந்தி வந்த ஒரு பக்தரின் வாக்கின் முலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையார் உருவம் சிறுபிள்ளைகளுக்கு பிடிக்கும் என்பதால் பாடசாலை மாணவர்கள் பலர் இங்கு வந்து வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
அத்துடன் பொதுமக்கள் பலர் இதனை பார்வையிடுவதற்கு வருகை தருகின்றனர்.