கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் பிரான்சிஸ் வாகனத்தில் மோதி காயமடைந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
கொலம்பியாவில் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பிரத்யேக வாகனத்தில் போப் பிரான்சிஸ் சென்றுகொண்டிருந்த போது பாதையில் கூட்டம் அதிகமாக திடீரென ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார்.
இதில் நிலைதடுமாறிய போப் பிரான்சிஸ் வாகனத்தின் மீது மோதினார். இதில் அவரது இடது கண் அருகே அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக ஐஸ் கட்டி மூலம் அந்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் போப் பிரான்சிஸின் கண்ணுக்கு கீழ் ஏற்பட்ட காயம் கருமையாக மாறியது. காயத்திலிருந்து வடிந்த இரத்தம் அவரின் வெள்ளை ஆடையில் தெளிவாக தெரிந்தது.
அதன் பின்னர் கார்டாகனா பகுதியில் 5 லட்சம் மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் போப் பிரான்ஸிஸ் உரையாற்றினார். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.