வித்தியா கொலை வழக்கு 7 பேரின் குற்றத்தை வழக்கு தொடுநர் தரப்பு இன்று உறுதி செய்தது.
படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணைகள் ட்ரயல் அட்பார் முறையில் இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கின் எதிரி தரப்பின் தொகுப்புரைகள் இன்று தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெற்றது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 எதிரிகளில் முதலாம் ஏழாம் எதிரிகளுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் ஏனைய ஏழு பேருக்கு எதிராகவும் சாட்டப்பட்ட குற்றங்கள் சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 எதிரிகளுக்கு எதிராகவும் 41 குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்டது.
வித்தியாவை கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியமை, கடத்தியமை, பலாத்காரம் செய்தமை மற்றும் கொலை உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கும் வகையில் வழக்கு தொடுநர் தரப்பால் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன.
அதே போன்று எதிரிகள் தரப்பு சாட்சியங்களும் முன்வைக்கப்பட்டு அனைத்து சாட்சியப்பதிவுகளும் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் வழக்கு தொடுநர் தரப்பிலான தொகுப்புரை இடம்பெற்றது.
அதன் போதே வழக்கு தொடுநர் தரப்பு பிரதி மன்றிதிபதி ப.குமாரரட்ணம், தனது தொகுப்புரையில் தெரிவித்தார்.
1,7 ஆம் எதிரிகளுக்கு எதிராக போதிய சாட்சியங்களை முன்வைக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதுடன், 2,3,4,5,6,8,9 ஆம் எதிரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் எந்தவித சந்தேகத்துக்கும் அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
எதிர்தரப்பு தொகுப்புரை நாளை இடம்பெறும் அதுவரை எதிரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்