மனைவியையே மாற்றி விட்டார்களா..? தமிழக அரசு செய்த குளறுபடி.

kajal_1தமிழக அரசானாலும் சரி, மத்திய அரசனாலும் சரி அவ்வப்போது சில அதிரடி வேலைகளை காட்டும். அங்கே மத்தியில் நீங்கள் அனுமனுக்கு ஆதார் கார்டு கொடுப்பீர்கள் என்றால்,

நாங்கள் மாநிலம், கஜல் அகர்வாலுக்கே ரேசன் பொருள் வாங்கும் ஸ்மார்ட் கார்டு கொடுப்போம் என்று தமிழகம் ஒரு வினோத செயலை செய்துள்ளது.

ஓமலூர் அருகே தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு ஒன்றில் குடும்ப தலைவி ஒருவரின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் இடம்பெற்றுள்ளது.

ஸ்மார்டாக யோசிக்கிறோம் என்று கூறி குடும்ப அட்டைக்கு பதிலாக தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் தொழில்நுட்பம் தான் யாவரும் அறிந்ததே, இதில் பல குளறுபடிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆர்.சி.செட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி . இவரது மனைவி சரோஜா, ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

ஒரு வழியாக பல நாள் காத்திருப்பிற்கு பின் ஸ்மார்ட் கார்டு வந்தது. அப்போது தான் அதிர்ச்சி காத்திருக்கிறது.

அதில் தனது மனைவி சரோஜா புகைப்படத்திற்கு பதில் நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு வேறு புகைப்படம் மாறி விட்டது, புது கார்டு வரும் வரையில் இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறி இருகின்றனர்.