ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில் தான் உள்ளாரா? வித்தியா வழக்கில் புதுப் புரளி

வழக்கு தொடுனர் தரப்பினால் மன்றில் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றது. எனவும் தமது தரப்பினர் அனைவரும் நிரபராதிகள் எனவும் , உண்மை குற்றவாளிகள் தப்பித்து விட்டார்கள் எனவும் , எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரையில் தெரிவித்துள்ளனர்.

punkuduthivu-vithya-400-seithy

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை , வழக்கு தொடுனர் தரப்பு தொகுப்புரை இடம்பெற்றது.
நேற்றைய தினம் புதன்கிழமை எதிரிகள் தரப்பு தொகுப்புரைக்காக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) கூடியது.

வழக்கு தொடுனர் தரப்பில் இன்றைய வழக்கு விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், மற்றும் சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

எதிரிகள் தரப்பில் 1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , மற்றும் சட்டத்தரணி லியகே ஆகியோரும், 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் , 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.

எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கு தொடுனர் தரப்பு சாட்சி நம்பகத்தன்மையற்றது. அதனை தொடர்ந்து 1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தனது தொகுப்புரையின் போது , இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக இப்ரான் என்பவரின் சாட்சியத்தை வழக்கு தொடுனர் தரப்பு முன் நிறுத்தி உள்ளது.

குறித்த சாட்சி ஏற்கனவே மோசடி குற்றசாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நபராவார். அவரது சாட்சியத்தை முன்னிலைப்படுத்த முடியாது. அந்த சாட்சியம் நம்பகத்தனைமை அற்றது.

சுவிஸ் குமார், குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார் எனில் , ஏன் பொறுப்புள்ள பொலிஸ் அதிகாரி அந்து தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை.

முரண்பாடான சாட்சியங்கள். அதேபோன்று மன்றில் குற்ற செயலை கண்ணால் கண்ட சாட்சியம் என முற்படுத்தப்பட்ட இரு சாட்சிகளும் , முரண்பாடான சாட்சியங்களை அளித்துள்ளன. சுரேஷ்கரன் என்பவர் சாட்சியம் அளிக்கையில் வன்புணர்வை வீடியோ புகைப்படம் எடுத்தது தொடர்பில் தெரியாது என சாட்சியம் அளித்துள்ளார். அதே இடத்தில் நின்ற மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் வீடியோ புகைப்படம் எடுத்தது என சாட்சியம் அளித்துள்ளார். இந்த இரு சாட்சியங்களும் முரணான சாட்சியங்களை வழங்கி உள்ளது.

எனவே இந்த குற்ற சம்பவம் தொடர்பில் எனது தரப்பினருக்கு எதிராக சந்தேகத்திற்கு இடமின்றி குற்ற சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை. என தெரிவித்தார்.

மதுபோதைக்கு அடிமையானவரின் சாட்சி நம்பகத்தன்மையா ? அதனை தொடர்ந்து ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி தொகுப்புரையின் போது , இந்த வழக்கின் கண்கண்ட சாட்சியாக முற்படுத்தபப்ட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவர் தினமும் ஒரு போத்தல் சாராயமும் 4 போத்தல் கள்ளும் குடிப்பேன் என சாட்சியம் வழங்கும் போது தெரிவித்து இருந்தார்.

தினமும் மதுபோதையில் இருக்கும் குடிக்கு அடிமையான ஒருவர் குடிபதற்காக எதுவும் செய்ய துணிந்தவர். அவருக்கு குடிக்க கொடுத்து தமக்கு வேண்டிய காரியங்களை எவரேனும் செய்து கொள்ள முடியும். எனவே அவரின் சாட்சியம் நம்பகத்தன்மை அற்றது என தெரிவித்தார்.

அதன் போது மன்று குடிகாரன் சாட்சி சொல்ல கூடாது என சட்டம் சொல்லி இருக்கா ? என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த சட்டத்தரணி அவ்வாறு இல்லை இந்த சாட்சியத்தின் நம்பகத்தன்மை அற்றதாக உள்ளது என கூறினார். சட்டவிரோத செயலில் ஈடுபடுபவரின் சாட்சி நம்பகத்தன்மையா ?

தொடர்ந்து தொகுப்புரையில் தெரிவிக்கையில் , அடுத்த கண்கண்ட சாட்சியமாக முற்படுத்தப்பட்ட மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் , இவர் சட்டவிரோதமாக வீட்டில் கள்ளு விற்பனை செய்பவர். அதற்காக பல தடவைகள் போலீசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தண்டம் செலுத்தி உள்ளார்.

அவர் தனது சாட்சியத்தில் 2ஆம் , 3ஆம் , 5 ஆம் , மற்றும் 6ஆம் எதிரிகள் தன்னுடைய வீட்டில் இருந்து கள்ளு அருந்தும் போது தான் வித்தியாவை கடத்த திட்டம் தீட்டியதாகவும் , தன்னுடைய வீட்டில் வைத்து தான் பொறுப்புக்கள் பகிரப்பட்டதகவும் சாட்சியம் அளித்துள்ளார். அத்துடன் மாணவி கடத்தப்பட்டு , வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு , படுகொலை செய்யப்படும் வரையில் கூட இருந்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.

அவ்வாறு எனில் அவர் சாட்சியமாக இந்த மன்றில் முற்படுத்தப்பட்டு இருக்க வேண்டியவர் இல்லை எதிரியாக மன்றில் நிற்க வேண்டியவர். ஏன் அவரை எதிரியாக சேர்க்கவில்லை என்பது தெரியவில்லை. மோசடி காரனின் சாட்சி நம்பகத்தன்மையா ?

அடுத்த முக்கிய சாட்சியாக முற்படுத்தப்பட்ட இப்ரான் , இவர் மோசடி வழக்கில் குற்றவாளியாக கண்டு தண்டனை கைதியாக சிறையில் இருப்பவர். அவ்வாறான மோசடி குற்ற சாட்டில் உள்ள ஒருவரின் சாட்சியம் நம்பகத்தன்மை உடையதா ?
இக் குற்றத்திற்கு இரு நோக்கங்களா ?

ஒரு குற்றத்திற்கு ஒரு நோக்கம் இருக்கலாம் ஆனால் இந்த குற்றத்திற்கு இரு நோக்கங்கள் உள்ளதாக வழக்கு தொடுனர் தரப்பு குற்றம் சாட்டுகின்றது. 6ஆம் எதிரி மாணவியை ஒரு தலையாக காதலித்ததாகவும் , அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து அவமானப்படுத்தியதால் பழிவாங்க செய்யப்பட்டதாகவும். மற்றையது சுவிஸ் நாட்டில் வசிக்கும் நபர் அங்குள்ள மாபியா கும்பல் கேட்டதற்கு இணங்க ஆசிய பெண் ஒருவர் கடத்தபப்ட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யும் நேரடி வீடியோ காட்சியாக இக் குற்றம் புரியப்பட்டதாகவும்.

இதில் முதாலவது நோக்கமாக கூறப்படும் ஒரு தலை காதல் பிரச்சனை தொடர்பில் மாணவியின் தாய் சாட்சியம் அளிக்கவில்லை. அவரிடம் பிரதான விசாரணையின் போது , மாணவி பாடசாலை சென்று வரும் போது பிரச்சனை ஏதேனும் இருந்ததா ? மாணவிக்கு காதல் தொடர்பு இருந்ததா ? என கேட்ட போது இல்லை என பதில் அளித்துள்ளார். குறுக்கு விசாரணையின் போது பாடசாலை சென்று வரும் போது யாரேனும் தொந்தரவு செய்வதாக வீட்டில் கூறியுள்ளாரா என கேட்ட போது அதற்கும் இல்லை என பதில் அளித்துள்ளார்.

மாணவியை 6ஆம் எதிரி ஒரு தலையாக காதலித்து தொந்தரவு பண்ணி இருந்தால் , மாணவியின் வீட்டாருக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்.
முரணான சாட்சியம்.

அடுத்து சம்பவ இடத்தில் நின்றதாக கண்கண்ட சாட்சியம் அளித்த சுரேஷ்கரன் மற்றும் மாப்பிள்ளை எனும் புவனேஸ்வரன் ஆகியோர் முரணான சாட்சியங்களை அளித்துள்ளனர்.