இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
புலம்பெர்ந்த அமைப்பு ஒன்றினால் அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த நிபுணர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலின் போது, வலிந்து காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் எனவும் வலியுருத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்களில், முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.