சிங்கிள் சோப்பு கட்டியால் கரைந்து நுரையானது, அமேசானின் மானம்..!!

ஆன்லைனில் பொருட்களை வாங்குவது தற்போது அன்றாட வழக்கமாகிவிட்டது. இதற்காக பல ஆன்லைன் விற்பனையாளர்கள் உள்ளனர்..

amazon

சோப்பு, சீப்பு முதல் ஸ்மார்ட்போன்கள் வரை ஆன்லைனில் பல விற்பனையாளர்கள்  இணையதளங்கள் மூலம் ஆர்டர் செய்து வாங்கலாம்..

இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த தவான் என்பவர் ஒன்ப்ளஸ் மாடல் ஒன்றை அமேசான் இணையதளம்மூலம்  ஆர்டர் கொடுத்துள்ளார்.

2  நாட்களில் பார்சலும் டெலிவரி ஆனது..டெலிவரி கொடுத்த நபரிடம் பணத்தை கொடுத்துவிட்டு ஆசை ஆசையாய் பார்சலை ஓபென் செய்துள்ளார்…

ஆனால் உள்ளே இருந்ததோ ஸ்மார்ட்போனுக்கு பதில் துணிதுவைக்கும் சோப்புக்கட்டி

இதனால் அதிர்ச்சி அடைந்த தவான் உடனடியாக அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார்..

ஆனால் அவர்கள் புகார்களுக்கு என்று ஒரு நம்பர் கொடுத்து அதில் கூறுமாறு சொன்னார்களாம்.

அதற்கு போன் செய்தால் சரியான பதில் இல்லை என்றும் நமது அழைப்பை எடுக்கவே பல நேரம் கடத்துவதாக கூறியுள்ளார் தவான்..

உடனே கடுப்பான தவான் சோப்புக்கட்டியை போட்டோ எடுத்துமுக நூலில் போட்டுவிட்டார்.

இது நடந்து ஒருசில மணி துளிகளில்அமேசான் பெயர் இந்திய அளவில் டேமேஜ் ஆனது. உடனடியாக தவானுக்கு நீதியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தகக்து.

சமூக வலைத்தளங்கள் தற்போது பலருக்கு நல்ல வகையில் பயன்படுகிறது..அமேசான் போன்ற எம்.என்.சி களை  சாதாரண மனிதன் நெருங்குவது என்பது இயலா காரியம்..அவர்களை எளிதாக நெருங்கும் வழியை தான் தவான் சுட்டிகாட்டியுள்ளார்..

இந்த சோப்புகட்டி பிரச்சனை புதிதன்று.,. ஆனால் அமேசான் சாதாரண நபருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பிற்கு நீதி வழங்கியது புதிதாகும்..