சிகரெட்டை விட ஆபத்தான புகை உங்கள் வீட்டில் !!

புகை என்றாலே அது ஏதோ ஒரு பிரச்சினையைக் கொண்டுவரக்கூடிய வஸ்து தான். எரிகின்ற குப்பையிலிருந்து புகைக்கின்ற சாம்பிராணிவரை உள்ள சகல வகையான புகையுமே பிரச்சினைக்குரியதுதான்.

smoke-data

ஆபத்தான புகை என்றால் எம் கண்முன்னே வருவது சிகரெட் புகை தான். ஆனாலும் நாம் ஆபத்து இல்லை என்று நினைக்கின்ற புகைகளும் மிகுந்த ஆபத்தானவைதான்.

அவ்வாறானவற்றில் ஒன்றுதான் ஊதுவர்த்தியும். நாம் வீட்டில் நறுமணத்தைப் பரப்புவதற்காகவும் ஆன்மீகத்தைப் பெருக்குவதற்காகவும் ஏற்றப்படும் ஊதுவர்த்திகளின் புகையால் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கே தருகின்றோம்.

ஊதுவர்த்தியின் புகையானது நமது உடலின் செல்களில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது டி.என்.ஏ போன்ற மரபணு மூலக்கூறுகளை மாற்றியமைப்பதோடு புற்றுநோய்க் கலங்களின் வளர்ச்சிக்கு பெரும் துணை புரிகிறது.

ஊதுவர்த்தியின் புகை சிலருக்கு இருமல் மற்றும் தும்மலை ஏற்படுத்துகிறது. இது சுவாசப்பாதையில் நச்சுக்களை உருவாக்குகிறது. இதில் உள்ள நுண்ணிய நச்சுக்கள், மிகவும் ஆபத்தானவை.

காற்று மாசுபடுவதினால் நுரையிரலில் எரிச்சல் ஏற்படுகிறது. இது நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்துகளை அதிகரிக்கலாம். மேலும் உடல் நலத்தையும் பாதிக்கிறது.

நறுமணமாயினும் காற்றை மாசுபடுத்தி, எரிச்சலூட்டுகிறது. ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகளை அதிகரிக்கிறது. இருமல் போன்றவற்றிற்கு காரணமாக உள்ளது.

உங்களுக்கு காற்று மாசுபாட்டினால் சருமத்தில் எரிச்சல், அலர்ஜி போன்றவை உண்டாகும் என்றால், ஊதுவர்த்தி புகை உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை இழக்கச்செய்யும். இது சில சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.

நீங்கள் கர்ப்பமாக இருந்தால், ஊதுவர்த்தி புகையை விட்டு சற்று தள்ளியே இருங்கள். இந்த புகை உங்களது சுவாசம் வழியாக சென்று கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்.

ஊதுவர்த்தியின் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இதனை நீண்ட நாட்கள் சுவாசித்து கொண்டிருந்தால், நரம்பியல் பிரச்சனைகள் உண்டாகும். கற்றல் திறன் குறைபாடு மற்றும் நினைவாற்றல் குறையும்.

நீங்கள் மன அமைதிக்காகவும், தெய்வ காரியங்களுக்காகவும் பயன்படுத்தும் இந்த ஊதுவர்த்தி, உங்களுக்கு தலைவலி மற்று தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளையும் கூட ஏற்படுத்தலாம்.

இவ்வளவு உதிரியான பிரச்சினைகளைக் கொண்ட நறுமணப் புகைகளை நீங்கள் ஒருபோதும் நன்மை செய்கின்ற புகையாக பார்க்கக்கூடாது.