புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதி வெளியாகும் என யாழ் மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கின் இறுதி சாட்சி பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது.
இன்னும் சில விடயங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டமையும் வழக்கின் இறுதி முடிவிற்காகவே என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு தீர்ப்பு தொடர்பில் இந்திய ஊடகங்கள் உட்பட சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பிற்காக இந்தியா காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதி இளஞ்செழியன் இந்த வழக்கின் மூவர் அடங்கிய நீதிபதி குழுவில் ஒருவராக பணியாற்றுகிறார்.
இதன் காரணமாக வழக்கு தொடர்பில் நியாயமான தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.