கொழும்பில் 40 தம்பதிகளுக்கு இன்று இலவச திருமணம்

கொழும்பு – பம்பலப்பிட்டியில் 40 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

indian_wedding

திருமண நிகழ்வு இன்று காலை பம்பலப்பிட்டி மாணிக்கவாசகர் பிள்ளளையார் கோவிலில் நடைபெற்று வருகிறது.

திருமண வைபவத்தில் 40 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அத்துடன் விருந்துபசாரமும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.