தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி மிக பிரபலமாக வலம் வந்துக்கொண்டிருக்கிறது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு குரல்கள் வசை பாடி வருகின்றனர்.
அந்த காணொளியில், 2300 அடி உயரத்தில் இருக்கக்கூடிய மலையில் இருந்து இளைஞர்கள் இறங்குகின்றனர். அந்த காணொளி, காண்பவரின் நெஞ்சை பதற வைக்கிறது. ஏறத்தாழ செங்குத்தாக இருப்பதுபோல் உள்ள அந்த மலையின் உச்சியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக இறங்குகின்றனர்.
மேலும், அவர்கள் இறங்கும் பாதை ஈரமாக இருப்பதாலும், தயக்கம் பதற்றத்துடன் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மிக பலமாக காற்றும் வீசும் நிலையில், அவர்கள் ஆறு மணிநேரம் எடுத்து அந்த மலையை இறங்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காணொளியானது, பலரின் வெறுப்பை பெற்றுள்ளது. கண்ணிமைக்கும் நொடியில் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் இப்படிப்பட்ட செயல்கள் தேவையில்லை என கடுமையாக சாடி வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த காணொளி உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.