காதல் பார்வை பற்றி பெண்களின் கருத்து

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் காதலர்களுக்கு கண் இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்த்துத்தான் காதலிக்கிறார்கள் என்கிறார் மருத்துவர் காமராஜ் அவர்கள்.

02-1364902431-couples-87-600

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் மட்டுமே காதல் மலர்கிறது. அண்ணல் நோக்குவதில்தான் முக்கிய விஷயமே இருக்கிறது.

அதற்குத்தான் சில விதிமுறைகளை இங்கு கொடுக்கப்படுகிறது

கண்ணோடு கண் பார்த்தல் என்பதே காதலுக்கு நல்லது. பெண்களின் பிற பாகங்களை ஆர்வமாகப் பார்ப்பது பெண்ணுக்கு கோபத்தை உண்டாக்கிவிடும்.

இயல்பாக பார்க்க வேண்டுமே தவிர, பார்வையிலேயே விழுங்கிவிடுவதைப் போல் ஆர்வம் காட்டக் கூடாது.

பார்வை நம் மீது இல்லாத நேரங்களிலும் நாகரீகமான பார்வை மட்டுமே காட்ட வேண்டும்.

பார்வையில் அன்பு தெரிய வேண்டும்.

பேச ஆரம்பிக்கலாமா என்பது போல அனுமதி கேட்கும் தொணியில் உங்களது பார்வை அமைய வேண்டும்.

முதலில் நீங்கள் விரும்புபவரைப் பார்க்கும் போது, அவர் இன்று அழகாக இருப்பதை பாராட்டுவது போல் உங்கள் பார்வை இருக்க வேண்டும்.

காதல் பார்வை பற்றி பெண்கள் கூறிய கருத்துக்களை இங்கு கூறுகிறோம்..

முதல் பார்வையிலேயே காதல் வரவில்லை. ஆனால் அடுத்தடுத்து அவர் பார்த்த சமயங்களில் ஏதோ ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது உண்மை. அவர் பார்வையில் இரு‌ந்த காதலும், அன்பும் அவர் மீது மரியாதை, நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது எ‌ன்ற பெரு‌ம்பாலான பெ‌ண்க‌ள் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

ஆனால் பெரும்பாலான ஆண்கள் முதல் பார்வையிலேயே பெண் மீது காதல் வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.

பெண் சாதாரண பார்வை மூலமாகவே ஆணை காதலில் விழச் செய்துவிட முடியும்.

ஆனால் ஆண் பெண்ணை காதலில் விழச் செய்வதற்கு கொஞ்சம் கூடுதலாகவே உழைக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை.