இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதுலைப் புலி உறுப்பினர்கள் 50 பேர் உள்ளிட்ட 150 குற்றவாளிகளின் பெயர்கள் அண்மையில் இன்டர்போலால் தேடப்பட்டு வருவோர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தன.
150 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டமை குறித்து மின்னஞ்சல் ஊடாக இன்டர்போலிடம் இந்த ஊடகம் வினவியுள்ளது.
இவ்வாறு தேடப்பட்டு வருவோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தவர்களை பட்டியலிருந்து நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தமை அல்லது பட்டியலில் உள்ளடக்கப்பட்டவர்கள் உயிரிழந்தமை ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இன்டர்போல் குறித்த ஊடகத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.
இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் அல்லது பொலிஸார் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.