தமிழகத்தைச் சேர்ந்த பிரீத்தி விஜய் என்ற பெண் தாய்ப்பால் மூலம் நகைகளை செய்து வருகிறார்.
சென்னையைச் சேர்ந்த பிரித்தி விஜய் என்பவர் தாய்மார்கள் பலர் அடங்கிய அமைப்பில் அங்கம் வகிக்கின்றார்.
இந்நிலையில் அந்த அமைப்பில் இருந்த ஒருவர் தாய்ப்பால் மூலம் நகைகள் செய்பவர்கள் யாராவது இந்தியாவில் இருக்கிறார்களா என கேட்டுள்ளார்.
இதை தான் முயற்சித்து பார்ப்பதாக பிரித்தி விஜய் களத்தில் இறங்கியுள்ளார். குறித்த முயற்சியில் வெற்றி கண்ட பிரித்தி விஜய் தற்போது வாரத்திற்கு 12 ஆர்டர்களாவது நாடு முழுவதிலும் இருந்து வந்துவிடுவதாக தெரிவிக்கின்றார்.
தாய்ப்பாலானது எளிதில் கெட்டுப்போகக் கூடிய திரவமாகும்.அதனை வைத்து நகைகள் செய்வது என்பது உண்மையில் சாதாரணமான விடயம் அல்ல.
தாய்ப்பால் மூலம் ஆரம்பத்தில் நகைகள் நான் செய்த போது, எல்லாவிதமான தாய்ப்பால் கெட்டுப்போகாமல் இருக்க அனைத்து வகையான வேதிபொருட்களையும் உபயோகித்து பார்த்தேன்.
ஆனால், அவற்றை உபயோகித்தும் ஒரு மாத காலத்திலேயே தாய்ப்பால் நிறம் மாறிவிடும்.அதன்பிறகு, இதற்கு தீர்வு பற்றி தோழிகளிடம் ஆலோசனைகளை கேட்டேன்.
இதையடுத்து நகைகள் செய்யும்போது தாய்ப்பால் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை தனக்கு கிடைத்ததாகாவும், அதுமட்டுமின்றி குழந்தையின் முடி, தொப்புள் கொடி, குழந்தையின் முதல் பல் ஆகியவற்றை அப்படியே பாதுகாக்க அவற்றின் மூலமாகவும் நகைகள் செய்து பிரித்தி விஜய் அசத்தி வருகிறார்.
தாய்ப்பால், குழந்தையின் முடி, பல், தொப்புள் கொடியை காலம் முழுமைக்கும் பாதுகாப்பாக வைக்க நினைப்பவர்கள், தன்னை அணுகி நகைகள் செய்து வாங்கிக் கொண்டு செல்வதாகவும், விலை ரூபாய் 1,000 முதல் 4,000 ரூபாய் வரை இருக்கும் என்றும், பெரும்பாலான ஆர்டர்கள் சமூகவலைத்தளமான பேஸ்புக் மூலம் வருவதாக பிரித்தி விஜய் தெரிவித்துள்ளார்.