தெற்கு ஈராக்கில் இடம்பெற்ற இரண்டு தாக்குதல்களில் குறைந்த பட்சம் 60 பேர் பலியாகினர். ஈராக்கின திகார் மாகாணத்தின் தலைநகர் நசிரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பின்னர் துப்பாக்கி தாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் அதே பகுதியில் உள்ள பாதுகாப்பு அரண் ஒன்றின் மீது மகிழுந்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படடதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதில் ஈரானியர்களும் சியா முஸ்லிம்களுமே அதிகளவில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.